logo

மரண அறிவித்தல் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி

WKennedy

மரண அறிவித்தல் கலாநிதி விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி(எதியோப்பிய பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர்)   தோற்றம்:-16-12-1967                                 
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

WKennedy

எமது கல்லூரியின் பழைய மாணவரும், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எதியோப்பியா, மடவலப பல்கலைக்கழக ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியரும், அடங்காத இனப்பற்றுடனும், தடம்புரளாத சமூகப்பொறுப்புடனும் தமிழ்மொழி, கல்வி, கலை, மேம்பாட்டுப் பணிசெய்து வந்தவருமாகிய பேராசிரியர்.கலாநிதி.ஜோன் மனோகரன் கெனடி விஜயரட்ணம்(கெனடி) அவர்கள் இன்று புதன்கிழமை(10.01.2018) அன்று
Read More


இணையத்தள நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பொன்விழா காண்பதையிட்டு திரு.ஐ.தி சம்பந்தன் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி

WIMG_9681 (2)

எமது நேச அமைப்பாகிய கனடா-காரை கலாசார மன்றத்தின் செயலாளராகவும் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஆளுமையும் செயற்திறனும் மிக்க செயற்பாட்டாளர் என்பதை அடையாளப்படுத்திய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பெண் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர். காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில்
Read More


க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

OLYMPUS DIGITAL CAMERA

உயிரியல் விஞ்ஞானம் – 1, உயிர் முறைமை தொழில்நுட்பம் – 2, வணிகம் – 1, கலைத்துறை – 4 உள்ளிட்ட 8 மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு!  முதல் தடவையாக  உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் 2 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்! சென்ற
Read More


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மலரும் ஆங்கில புத்தாண்டு 2018 அனனவருக்கும் இனிய ஆண்டாக அமைய எமது நல்வாழ்த்துக்கள்!

“Happy-Puthandu”-Tamil-New-Year-Wishes-Quotes


எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியை திருமதி.ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

akka_pic

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் இக்கல்லூரியின் முன்னைநாள் விஞ்ஞான ஆசிரியையுமாகிய திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது.

திருமதி ரஞ்சனாதேவி எமது கல்லூரியில் கற்றுவந்த காலத்தில் அவரிடத்தில் காணப்பட்ட அமைதி, அடக்கம், பணிவு என்பவற்றுடன் கல்வியில் அவர்காட்டிய ஈடுபாடும் காரணமாக இவரது ஆசிரியர்களிடத்தில் நன்மதிப்பினைப் பெற்றவராக விளங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் மாணவ முதல்வராகவும் பணியாற்றி ஆளுமை மிக்கவர் என்பதை நிரூபித்தவர்.

தான் கற்ற பாடசாலையிலேயே விஞ்ஞான ஆசிரியையாக பதவியேற்றுக்கொண்டு இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்தினை சிறப்புற போதித்து கற்பித்தல் திறன் மிக்க ஆசிரியை என்ற பெயரினைப் பெற்றவர். இவரைப் போன்றே பழைய மாணவர்களான இவரது சகோதரங்களும் கல்வியில் சிறந்து விளங்கி உயர் பதவிகளை வகித்து கல்லூரியின் புகழை விளங்கவைத்து வருகின்றனர் என்பது இத்தருணத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னாரது இழப்பினால் பெரும் துயருற்றிருக்கும் அன்னாரது ஆருயிர்க் கணவர், பாசமிகு பிள்ளைகள், அன்புமிக்க உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் -கனடா

முழுமையான கண்ணீர் அஞ்சலிப் பிரசுரத்தினைக் கீழே காணலாம். Tribute to Ranjanadevi

 


மரண அறிவித்தல், திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (ஆசிரியை -St.Charles Maha Vidyalayam,யாழ்ப்பாணம்) (களபூமி,காரைநகர்) (பிரவுண் (Brown)வீதி,யாழ்ப்பாணம்)

akka_pic

திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் பூமியில்: 1963-02-09                                                     
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

akka_pic

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் விஞ்ஞான ஆசிரியையும், பழைய மாணவியும், காரைநகர், பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகக் கொண்டவரும் யாழ். புனித சாள்ஸ் வித்தியாலய ஆசிரியையும் ஆகிய திருமதி.ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (இன்பம்) அவர்கள் நேற்று சனிக்கிழமை (30-12-2017) அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தார் என்ற
Read More


கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளரும் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இணையதளப் பொறுப்பாளருமான சகோதரி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வழங்கும் வாழ்க்கைச் சிறு குறிப்பும் வாழ்த்துப் பாவும்.

50th bday SKDB

திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் கனடா வாழ் காரை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் பொதுப்பணி புரிந்து இவ்வாண்டு 24-10-2017 அன்று தனது ஐம்பதாவது வயதைப் பூர்த்தி செய்துள்ளார். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் கடந்த 03-12-2017 அன்று யாழ்ற்றன் கல்லூரியில் முத்தமிழ்
Read More


பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

WIMG-6e56aeea0224a7c537dc53395ff20b91-V

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும்.  இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட  பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது
Read More