தனிப்பட்ட பயணத்தினை மேற்கொண்டு காரைநகர் சென்ற பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரான திருமதி பிரபா ரவிச்சந்திரன் கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களை அவரது காரியாலயத்தில் சந்தித்து கல்லூரியின் அபிவிருத்தி, கனடாக் கிளையின் உதவி என்பன சார்ந்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வழங்கி வருகின்ற பலதரப்பட்ட உதவிகளினாலும் கல்லூரி துரித வளர்ச்சியடைந்து வருகின்றமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதிபர் இதற்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
அதிபருடனான சந்திப்புக் குறித்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன:
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திருமதி பிரபா ரவிச்சந்திரன் கல்லூரி அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார்.”