காரைநகர் இந்துக் கல்லூரியின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை செப்ரெம்பர மாதம் 1ஆம் திகதி 2012ஆம் ஆண்டு தோற்றம்பெற்று கல்லூரியைச் சார்ந்த அனைவரையும்; பேருவகையும் பெருமிதமும் கொள்ளவைத்திருந்தது. தனது தளர்விலாத கல்விப் பணியில் 130 ஆண்டுகளைக் கடந்த பழமையையும் சிறந்த பராம்பரியத்தையும் கொண்டுள்ளதும் காரை மண்ணின் அடையாளத்தை விளங்கவைப்பதில் முதன்மை பெற்று விளங்குகின்றதுமாகிய இக்கல்லூரியின் மேம்பாடு என்கின்ற உன்னதமான இலட்சியப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையானது பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்திய வண்ணம் ஆறு ஆண்டுகளைப் பூர்த்திசெய்து ஏழாவது ஆண்டில் பாதம் பதிப்பதையிட்டு பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர்களும் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றனர். இச்சங்கத்தின் அனைத்து வரலாற்று வெற்றிகளுக்குப் பின்னாலும் இருந்து உதவி ஆதரவளித்து வருகின்ற அங்கத்தவர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகள், அர்ப்பணிப்புடன் உழைத்த முன்னைய நிர்வாகங்களின் உறுப்பினர்கள், போசகர்கள், இணையத்தள நிர்வாகி, பிரதேச இணைப்பாளர்கள் ஆகியோருக்கும் ஒத்துழைத்த கல்லூரியின் அதிபர்களுக்கும் தாய்ச் சங்க நிர்வாகங்களிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக்கிளை இத்தருணத்தில் தலைசாய்த்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது.
அரச உதவி கிடைக்கப்பெறாத கல்லூரியின் நாளாந்த செலவீனங்களுக்கு உதவிக்கூடிய நிரந்தர வைப்புத்திட்டத்தினை ஏற்படுத்திக்கொடுப்பதே சங்கத்தின் அடுத்தகட்ட வரலாற்றுப் பணியாகத் திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகளில் தற்போதய நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதும்போல உங்கள் அனைவரதும் ஆதரவுடன் இவ்வரலாற்றுப் பணியினையும் வெற்றிகரமாக நிறைவுசெய்து கல்லூரியின் சுமுகமான செயற்பாட்டினை உறுதிசெய்வதுடன் தனது இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து வீறுநடைபோடும்.
No Responses to “பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தனது இலட்சியப் பயணத்தில்ஆறு ஆண்டுகளைப் பூர்த்திசெய்து ஏழாவது ஆண்டில் பாதம் பதிக்கின்றது.”