எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி கனடா ஸ்ரீஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ள காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு நிறைவு விழாவிற்கான அனுசரணையினை காரை. இந்து அன்னையின் மைந்தர்களும் நலன் விரும்பிகளும் தயங்காது வழங்கி வருவதும் விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்துடன் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுவருவதும் எமக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளன. இவ்விழாவினை பாடசாலையின் மேம்பாடு நோக்கி உச்சக்கட்டப் பயனுடையதாக அமைக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் பழைய மாணவர்களிடத்திலும் நலன் விரும்பிகளிடத்திலும் பின்வரும் அன்பான வேண்டுகோளினை முன்வைத்து அனைவரதும் மேலான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வேண்டிநிற்கின்றது.
விழாவிற்கு மேலும் அனுசரணையாளர்கள் வரவேற்கப்படுவதுடன் இவ்விதம் அனுசரணை வழங்கி கல்லூரி அன்னையின் மேம்பாட்டில் பங்குகொள்ள விரும்புவோர் கீழே தரப்பட்டுள்ள தொடர்புத் தகவல்கள் ஒன்றுடன் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
எமது சங்க உறுப்பினர்கள் தனித்தனியாக தங்களை அணுகி தங்களது ஆதரவினை வேண்டும்போது இயன்ற அன்பளிப்புத் தொகையினை வழங்கி நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு விழாவிற்கான வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
விழாவினை முன்னிட்டு வரலாற்று ஆவணமாக வெளியிடப்படவிருக்கின்ற சிறப்பு மலரில் இடம்பெறும் வகையில் வர்த்தக மற்றும் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் விளம்பரங்களை தந்து உதவமுடியும். பழைய மாணவர்கள் தனிப்பட்டமுறையில் இச்சிறப்பு மலரின் ஒரு பக்கத்தினைப் பொறுப்பேற்றுக்கொண்டு விழாவினையும் சங்கத்தின் பணிகளையும் வாழ்த்தி உங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களைப் பதிவுசெய்து கொண்டு உதவ முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் வழங்கும் அனைத்துவிதமான உதவிகளும் கல்லூரியின் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் சார்ந்த குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தேவைகளை நிறைவு செய்வதற்குப் பயன்படும் வகையில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை, தாய்ச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் திட்டமிட்டுச் செயலாற்றும். சங்கத்தின் கடந்த காலச் செயற்பாடுகள் இதற்குச் சான்றாகவுள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொண்டு கல்லூரியின் மேம்பாடு நோக்கி நடாத்தப்படுகின்ற 5வது ஆண்டு விழாவினை வெற்றி விழாவாக அமைக்க ஆதரவு நல்குவதுடன் இந்து அன்னையின் கீர்த்திக்கு மீண்டும் வலுச்சேர்க்க முன்வருமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
தொடர்புகளிற்கு: 416 804 0587 அல்லது 416 639 2930
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
No Responses to “காரை.இந்துவின் மைந்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரிடத்தில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் அன்பான வேண்டுகோள்”