முன்னணி இளம் வாய்ப்பாட்டுக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் முன்னணி பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்த்துகின்ற இசைக் கச்சேரி.

By | on October 7, 2023 | 0 Comment
Spread the love

கனேடிய இசை உலகின் முன்னணி இளம் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞராக விளங்குபவர் காரை.மண்ணைச் சேர்ந்த செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களாவர். கனடாவிலும் தமிழகத்திலும் பல இசை அரங்குகளிலும் இவரது இசைக் கச்சேரி இடம்பெற்றிருந்ததுடன் இவற்றின் ஊடாக இசை ரசிகர்களினதும், கலைஞர்களினதும் பலத்த பாராட்டினையும் பெற்றுக்கொண்டவர். அண்மையில் தாயகம் சென்று காரை.மண்ணிலும், யாழ்.பல்கலைக்கழகத்திலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி ரசிகர்களின் அமோக வரவேற்பினையும் பெற்றுக்கொண்டிருந்த பெருமைக்குரியவர்.

எதிர்வரும் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறன்ரோ வரசித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் இவரது சிறப்பு இசைக் கச்சேரி ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. காரை.மண் தந்த மற்றொரு முன்னிணி வயலின் இசைக்கலைஞரான செல்வன் மிதுரன் மனோகரன் வயலினும், தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள இசை உலகின் புகழ்பூத்த தவில்கலைஞரான திருபுன்கூர் T.G.முத்துகுமாரசாமி, மற்றொரு தமிழகக் கலைஞர் காவாலம் ஸ்ரீகுமார் ஆகியோர் தவில் இசை வழங்கியும் அமுதீசர் அவர்களின் இசைக் கச்சேரியை மெருகூட்டி சிறப்பிக்கவுள்ளனர்.

செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் தந்தை தாயாரான திரு.சச்சிதானந்தன் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் ஆகியோர் பழைய மாணவர் சங்க கனடாக்கிளை உறுப்பினர்கள் என்பதுடன் திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராக பதவி வகித்து சங்கத்தின் செயற்பாடுகளில் பங்குகொண்டு மிகுந்த கரிசனையுடன் பணியாற்றி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் அவர்களின் இசைக் கச்சேரி சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது.

இசைக்கச்சேரி தொடர்பான விளம்பரப் பிரசுரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Author Description

No Responses to “முன்னணி இளம் வாய்ப்பாட்டுக் கலைஞர் செல்வன் அமுதீசர் சச்சிதானந்தன் முன்னணி பக்கவாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து நிகழ்த்துகின்ற இசைக் கச்சேரி.”

You must be logged in to post a comment.