பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையினால் இணையத்தள சேவை www.karaihinducanada.com 17-03-2013 முதல் ஆரம்பத்துவைக்கப்பட்டுள்ளது. Scarborough Civic Centre ல் நடைபெற்ற நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்;து கொண்டிருந்த கூட்டத்தின்போது சங்கத்தின் தலைவர் திரு.சி.தம்பிராசா இவ்விணையத்திற்கு முதலில் விஜயம் செய்தும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களை அழைத்து தெரியப்படுத்தியும்இணையத்தள சேவையினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.சங்கத்தின் போசகர் திரு.மு.வேலாயுதபிள்ளை தாய்ச் சங்க போசகர் திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களை அழைத்து தெரியப்படுத்தியிருந்ததுடன் இருவரும் தமது மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொண்டனர். இணையத்தளத்தின் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களிற்கும் ஏனைய நிர்வாக உறுப்பினர்களிற்கும் தொலைபேசி ஊடான உரையாடலின்போது தமது மகிழ்ச்சியினையும் பாராட்டுக்களையும் நன்றியினையும் திரு.சதாசிவமும் திருமதி தவபாலனும் தெரிவித்துக்கொண்டதுடன் இச்செய்தியினை பாடசாலைச் சமூகத்திற்கும் காரைநகர் மக்களிற்கும் அறிவிக்கவுள்ளதாகவும் கூறினர்.
இவ்விணையத்தளத்தினை சிறப்புற வடிவமைத்து உதவியதுடன் தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கிவருகின்ற திரு. சிவகணேசன் வேலாயுதபிள்ளை அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய கல்லூரி அதிபருக்கும் தாய்ச் சங்க நிர்வாகத்திற்கும் மற்றும் வாழ்த்துச் செய்திகள் வழங்கி ஆதரவளித்தவர்களிற்கும் போசகர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் சங்கத்தின் சார்பில் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
No Responses to “காரையில் ஒளி பரப்பும் இந்துவின் புகழ் பரப்ப www.karaihinducanada.com இணையத்தள சேவை உதயமாகியது”