விஜே ரிவியின் சுப்பர் சிங்கர்-4 போட்டியில் பங்கு பற்றி முன்னணி போட்டியாளர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டதுடன் கர்நாடக இசை ரசிகர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றவரான சாயி விக்னேஸ் காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக கர்நாடக இசைக் கச்சேரியினை நிகழ்த்தும் பொருட்டு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் கனடாவிற்கு வருகை தரவுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரி மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் ஸ்காபுரோவில் செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி கனடாவில் நடைபெறும் இவரது முதல் கர்நாடக இசை நிகழ்வு என்பதால் கர்நாடக இசை ரசிகர்களிற்கு அரிய வாய்ப்பாகவும் பெரு விருந்தாகவும் அமையவுள்ளது.
சுப்பர் சிங்கர்-4 போட்டியில் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி இலட்சக்கணக்கான விஜே தொலைக்காட்சி ரசிகர்களை அசத்தியிருந்ததுடன் இவரது கர்நாடக இசை ஆற்றல் சுப்பர் சிங்கர் நடுவர்களினால் வெகுவாகப் பாராட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஏற்பாட்டில் சுப்பர் சிங்கர் புகழ் சாயி விக்னேஸின் கர்நாடக இசைக் கச்சேரி”