எமது கல்லூரியின் பழைய மாணவரும் எமது சங்க உறுப்பினர் திரு.கணேசபிள்ளை சோமசுந்தரம் அவர்களின் அன்புத் தந்தையுமாகிய திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம் (இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்கள் வியாழக்கிழமை(31.03.2016) அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார். என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம்
(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்)
(பாலாவோடை,மருதடி, காரைநகர், கனடா)
மலர்வு: 30.07.1922 உதிர்வு: 31.03.2016
யாழ் காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கனடா, ரொரன்ரோவில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம்(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்) அவர்கள் வியாழக்கிழமை(31.03.2016) அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கு), சரோஜினிதேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சணி சிவலோகநாதன், லாவண்யா, தக்ஷா, சயந்தன், கஜன், தஷ்னி, விஷ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5:00 மணி – 9:00மணி வரையும் மறுநாள் திங்கட்கிழமை 04.04.2016 மதியம் 12:00 மணி – 1:00 மணி வரையும் 8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ளChapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே மண்டபத்தில் பிற்பகல் 1:00 மணி – 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் 1591 Elgin Mills Rd East Richmond Hill, ON L4S 1M9 என்ற முகவரியில் அமைந்துள்ள Elgin Mills Cemetary & Crematoriam இற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கணேசபிள்ளை (மகன், கனடா) 416-918-9868
ஸ்கந்தராசா (மகன், கனடா) 647-221-4721
சரோஜினிதேவி (மகள், லண்டன்) 0132-222-1986
No Responses to “மரண அறிவித்தல் திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம் (இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்)(பாலாவோடை,மருதடி, காரைநகர், கனடா)”