கொரோனா பெரும் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த எமது தாய்ச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் சென்ற 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் பதவி வழித் தலைவரான கல்லூரியின் அதிபர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்நடைபெற்றது.
தலைவர் திரு.அஜெகதீஸ்வரன் தமது தலைவர் உரையின்போது கல்லூரியின் கல்விசார் செயற்பாடுகள், கல்வி சாரா செயற்பாடுகள் ஆகியனவற்றின் முன்னேற்ற நிலை குறித்து விபரித்துக் கூறியதுடன் கடந்த காலங்களில் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் விபரித்துக் கூறியிருந்தார். பழைய மாணவர் சங்கத்தின் முன்னைய நிர்வாகம் வழங்கிய உதவிகளிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆற்றி வருகின்ற பெரும் பங்களிப்பினை பாராட்டி தமது விசேட நன்றியினையும் தெரிவித்திருந்தார்.
ஆண்டறிக்கை, வரவு-செலவு அறிக்கை என்பன் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. பின்வருவோர் புதிய நிர்வா சபைக்கு ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
தலைவர்: திரு.அ.ஜெகதீஸ்வரன் (பதவி வழியாக)
உப-தலைவர்: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை
செயலாளர்: திரு.கணபதிப்பிளிளை நிமலதாசன்
உதவிச் செயலாளர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம்
பொருளாளர்: திரு.ச.சுகந்தன்
நிர்வாக சபை உறுப்பினர்கள்:
திரு.த.சற்குணராசா
திரு.கை.நாகராசா
திரு.பா.இராமகிருஸ்ணன்
திரு.இ.திருப்புகழூர்சிங்கம்
திரு.நா.கேதாரநாதன்
திரு.வ.வடிவழகையன்
திரு.தெ.லிங்கேஸ்வரன்
திரு.வி.கம்சன்
செல்வி நா.கலைச்செல்வி
செல்வி த.தர்சினி
உள்ளக கணக்காய்வாளர்: திரு.சு.அகிலன்.
பழைய மாணவர் சங்கத்தின் முன்னைய நிர்வாகம் பழைய மாணவர் சங்கத்தின் உதவிகள் சார்ந்து வழங்கிய ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் சங்கத்தின் கனடாக் கிளை நிர்வாகம் ; அவர்களைப் பாராட்டி உளமார்ந்த நன்றியையும் தெரிவிப்பதுடன் அமையப் பெற்றுள்ள புதிய நிர்வாக சபையை வாழ்த்தி இரு சங்கங்களுக்கிடையேயான நல்லுறவும் பரஸ்பர ஒத்துழைப்பும் மேம்பட்டு விளங்கும் என்ற நம்பிக்கையினையும் வெளிப்படுத்தியுள்ளது.
No Responses to “காரை.இந்து பழைய மாணவர் சங்கத்திற்கு அமையப் பெற்றுள்ள புதிய நிர்வாக சபையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வாழ்த்துகிறது.”