அன்பர்ர்ந்த உறுப்பினர்களே!
உறுப்புரிமைப் பணத்தினை பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடு
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை கடந்த மூன்று ஆண்டுகளாக பாடசாலையின் வளர்ச்சிப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து பாடசாலை வரலாற்றில் குறிப்பிடும்படியான பதிவுகளை ஏற்படுத்தி வருவதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்ப்Pர்கள்.
தாங்கள் வருடாந்தம் வழங்கி வருகின்ற உறுப்புரிமைப் பணம், பலரும் தாமாகவே முன்வந்து வழங்கி வருகின்ற நன்கொடைகள், அவ்வப்போது எமது ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வருகின்ற நிதி உதவி நிகழ்ச்சிகள், அனுசரணையாளர்கள் நலன் விரும்பிகள் வழங்கி வருகின்ற உதவிகள் ஆகியன இணைந்து சங்கத்தின் நிதித் தேவைகளை நிறைவு செய்து வருகின்றன.
இவ்வாண்டு பூர்த்தியடையவுள்ள நிலையில் அங்கத்தவர்களிடமிருந்து நிலுவையாகவுள்ள உறுப்புரிமைப் பணத்தினையும் அடுத்த ஆண்டிற்கான உறுப்புரிமைப் பணத்தினையும் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உறுப்புரிமைப் பணத்தினை ஏற்கனவே வழங்கி உதவிய உறுப்பினர்களிற்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதுவரை உறுப்புரிமைப் பணத்தினை செலுத்தாதிருக்கின்ற உறுப்பினர்கள் தாம் வதியும் நகரத்திலுள்ள எமது நிர்வாக சபை உறுப்பினர்களுடனும் மொன்றியல் ஒட்டாவா பிரதேச இணைப்பாளர்களுடனும் தொடர்புகொண்டோ அல்லது அவர்கள் தங்களுடன் தொடர்புகொள்ளும்போது அதனைச் செலுத்தி உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
உறுப்பினர்களிடமிருந்து இயன்ற நன்கொடைகளையும் எதிர்பார்க்கின்றோம். உறுப்புரிமைப் பணத்தினையும் தாங்கள் விரும்பின் இயன்ற நன்கொடையினையும் பின்வரும் சங்கத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட பின்னர் எம்மை அழைத்து விபரங்களை அறியத்தரமுடியும்.
வங்கியின் பெயர்: TD Canada Trust
கணக்கின் பெயர்:Dr.A.Thiyagarajah Madya Maha Vidyalayam(Karainagar Hindu College) Old Students Association-Canada.
கணக்கிலக்கம்: 5238995 கிளை(Transit) இலக்கம்: 0329
கனக சிவகுமாரன் 647-766-2522 மா.கனகசபாபதி 416-267-6999
செயலாளர் பொருளாளர்
No Responses to “பழைய மாணவர் சங்க கனடா கிளை உறுப்பினர்களிற்கு சங்க நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோள்”