வாழ்த்துரை
Hello Master இலண்டனிலே
வணக்கம் Sir காரைநகரினிலே
சோமாஸ்கந்தன் Masterக்கு வணக்கம்
சோ எனக் கொட்டும் மழை போல் வணக்கம்
வியாபாரிமூலையில் 1940இல் பிறந்தவனே!
வியாபாரிகள் நிறைந்த காரைநகரை என்றும் சேர்ந்தவனே – எங்கும்
வியாபகமாய் வாழும் எம்மக்கள் நின்னை மறப்பாரோ?
வியூகமான நினது கற்பித்தலையும் திறமைகளையும் மறப்பாரோ?
காலம் நம்மை பிரித்தாலும் கடந்து தூரம் சென்றாலும் என்றும்
இனிக்கும் நம் கல்லூரி நினைவுகள்!
Principal தியாகராஜா எங்கள் வீட்டுப்பிள்ளை
நீயோ என்றும் அவரது செல்லப்பிள்ளை
ளுpழசவளஅநநவ என்றால் Principal சோமாஸ் இடம் கேள் என்பார்
Sportsmeet என்றாலும் Principal சோமாஸ் இடம் கேள் என்பார்
அந்தநாள் ஞாபகங்கள் எவ்வளவோ எவ்வளவோ
இந்த நாட்களிலும் நிற்பவை எவ்வளவோ எவ்வளவோ
1961 இல் உனது நெறியாள்கையில் இளங்கோவடிகள் நாடகம்
பின்பு தொடர்ந்து Sportsmeet இல் Pyramidbuilding show
Sportsmeet ஒழுங்குக்காக ஏழடரவெநநச சேவை அறிமுகம்
என்று சில, இன்னும் பல உண்டு
கணேசன் ஒலிபெருக்கியின் சதுர Champion mic முன்பு
பாரதி,காந்தி,நடராஜா,சயம்பு என வரிசையில் நாம் இருப்பது பின்பு
மஞ்சள் சூரியனுடன் Sportsmeet இன் பரிசளிப்பு தொகுப்பு – அதன்
கணீர் என்று நின் குரல் நம் காதில் இன்றும் ஒலிப்பது வியப்பு!
பொது விஞ்ஞானம் போதும் எனப்புகட்டினாய்
Physics ஐப் பிசகில்லாமல் விளக்கினாய்
Additional Classes உம் எடுத்தாய் – எமக்கு
Results இல் C க்களும், Dக்களும் வரச் செய்தாய்
கதிரவேற்பிள்ளையுடன் Gas plant சுத்துவோம் – பின்பு
களவாக Water Tank இல் தண்ணீர் குடித்து அடியும் வாங்குவோம்
எப்படி மறப்பது எல்லாவற்றையும் எப்படி மறப்பது
சக கல்லூரியுடன் Football friendly match – பின்பு
செட்டியர் கபே வடையுடன் Tea party உம் நன்றி நவிலலும்
Sir உங்களுக்கு நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!!
இன்று உங்களுக்கு பிறந்தநாள் – அது
என்றும் நம் நினைவில் நிற்கும் நாள்
நீ வாழ நீடுழி வாழ
நினது மனையாள் மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் வாழ
ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின்
சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ வாழ்த்துகின்றோம்.
“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க||
நன்றி
மனமார வாழ்த்தும்
நின் பழைய மாணவர்கள் சார்பில் பூபாலபிள்ளை விவேகானந்தா
சுவிஸ் வாழ் காரை மக்கள் சார்பில் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள், சுவிஸ் வாழ் காரை மக்கள்
No Responses to “ஆசிரியர் சோமாஸ்கந்தன் அவர்களுக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை பிறந்தநாள் வாழ்த்து”