கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.முருசேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை(இளைப்பாறிய பிரதி நிலஅளவையாளர் நாயகம்) அவர்கள்
காரைச் சங்கமம் 2015.
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்.
இடம்:- Kinsbury High School மைதானம், Stag Lane , Kingsbury , London , NW9 9AA ,
காலம்:- 12/07/2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை.
பிரதம விருந்தினராக காரை இந்துக் கல்லூரியில் 18 வருட காலம்(1965-1983) விஞ்ஞானம் , பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக அரும்பணியாற்றிய இளைப்பாறிய ஆசிரியர் திரு A .சோமாஸ்கந்தன் அவர்களும்,
சிறப்பு விருந்தினராக நியூயார்க், அமெரிக்காவில் இருந்து வைத்திய கலாநிதி ராதா செல்வரத்தினம் கோபால்– ராதகோபால்– அவர்களும், கௌரவ விருந்தினர்களா பிரான்ஸ் நகரத்தில் இருந்து இணையற்ற சமூக சேவையாளர், இளைப்பாறிய ஆசிரியர் திரு. A .செல்வச்சந்திரன் -நேரு மாஸ்டர் – அவர்களும் , கனடாவில் இருந்து கனடா காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு . முருசேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை , திரு கார்த்திகேசு சிவசோதிநாதன் அவர்களும் மற்றும் ஜேர்மனியில் இருந்து திரு. K . ஆனந்தசற்குணநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறனர்.
இத்தருணம் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவைரும் கலந்துகொண்டு , மைதானத்தில் பரிமாறப்படும் கூழ் முதலிய தாயக உணவு வகைகளையும் உண்டு, சிறியவர் பெரியவர்களுக்ககான விளையாட்டு போட்டிகளிலும் பங்குபற்றி மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர்.
மேலதிக தொடர்புகளுக்கு:- நாதன் –07944 232014 மனோ – 07859 900771 , குமார் – 07951 950843.
நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு – lankasritv.net , மற்றும் www .karainagar .co எனும் இணையத்தள முகவரிக்கு 12/07/2015 காலை 10:00 மணி முதல் மாலை 06:00 மணிவரை தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
நிர்வாகம்.
பிருத்தானியா காரை நலன்புரிச்சங்கம்.
No Responses to “காரை இந்து மைதானத்தில் வரலாற்று சாதனைகள் படைத்த விளையாட்டு வீரர்கள் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் காரை சங்கமம் -2015 இல்”