1950ம் ஆண்டு நடராஜா ஞாபகார்த்த மண்டபம் ,பிரசவமனை ஆகியவற்றை நிர்மாணித்த பின் மிகுதியாக இருந்த காணியை (ஏறத்தாழ 40 பரப்பு) திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துவதற்கு அன்பளிப்பு செய்தமையை அறியக் கூடியதாக உள்ளது. 1950 களில் காரை இந்துவில் உடற்கல்வி போதனாசிரியராக கடமையாற்றிய திரு.J.C. அருளம்பலம் அவர்கள் விளையாட்டு மைதானத்தை ஆரம்ப காலத்தில் அபிவிருத்தி செய்வதில் அக்கறையாக செயற்பட்டார் என்பதனையும் அறியமுடிகின்றது.
காரைநகர் இந்துக் கல்லூரி மைதானம் மாணவர்களையும், மாணவிகளையும் மெய்வல்லுநுர் திறமைகள், சாதனைகளின் பதிவுகள் மூலம் வீரர்களாகவும், வீராங்கனைகளாகவும் உதைபந்தாட்ட போட்டியின் பயனாக உதைபந்தாட்ட வீரர்களாகவும் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை உடையது. காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானம் நெருக்கமான பள்ளித் தோழர்களை அறிமுகப்படுத்தி, வாழ்க்கைக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து, சுக வாழ்விற்கான உடல் வலுவினை வழங்கி எண்ணிக்கையில் அதிகமானோர் மனங்களில் காலத்தால் அழியாத மனப்பதிவுகளை சுமந்து நிற்கின்ற இம் மைதானம் அபிவிருத்தியினை வேண்டி நிற்கின்றது. அபிவிருத்தி பணியில் அனைவரும் பங்கேற்க வேண்டியது அவசியம்.
‘காரைநகரும் விளையாட்டு துறையும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் காரை இந்துவின் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கெடுத்து மாவட்ட, தேசிய ரீதியில் பதிவு செய்த சாதனைகள், திறமைகள்; மைதானத்தின் அபிவிருத்தியின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. காரை இந்துவின் மைதானத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள், வீராங்கனைகள் தமது பெயர்களை வரலாற்றுக் குறிப்புகளில் பதிந்ததோடு மட்டுமல்லாது தமது கல்லூரிக்கும், கிராமத்துக்கும் புகழ் சேர்த்துள்ளனர்.
விளையாட்டு மைதானத்தின் முக்கியம்
1) காரைநகரின் எந்தப் பகுதியில் இருந்தும் இலகுவில் வந்து அடையக் கூடியவாறு கிராமத்தின் மத்தியில் உள்ளது.
2) காரைநகர் கோட்டப் பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் இம் மைதானத்தில் தான் நடைபெறுகின்றன.
3) காரைநகர் பிரதேசசெயலக பிரிவின் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் இம் மைதானத்தில் தான் நடைபெறுகின்றன.
4) மாலை வேளைகளில் கல்லூரிகளில் கல்வியை நிறைவு செய்த இளைஞர்கள் கல்லூரியின் தேவைகளுக்கு மைதானம் பயன்படுத்தாத வேளைகளில் மைதானத்தை விளையாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துகின்றனர்.
5)காரைநகரின் விளையாட்டு நிகழ்வுகளின் அச்சாணியாக (Hub) காரை இந்துவின் விளையாட்டு மைதானம் திகழ்கின்றது.
எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதன் அவசியம்
1) படத்தில் 1 என குறிப்பிடப்பட்ட பகுதியில் காணப்படும் மருத்துவமனையின் மதில் மைதானத்தை நோக்கி உள் வளைந்து இருப்பதனால் மைதானத்தின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியை நோக்கி பந்தை கொண்டு செல்லும் இடது கரை உதைபந்தாட்ட வீரரின் பார்வைக்கு இம் மதில் சுவர் அச்சுறுத்தலாக தென்படுவதனால் பந்தை விரைவாக கொண்டு செல்ல வேண்டிய நேரத்தில் பந்தை மெதுவாக கொண்டு செல்வதனால் தன் சக வீரர்கள் கோல் ஒன்றினை இடுவதற்கு தாமதமாக பந்தை வழங்கும் நிலை உள்ளது. மேலும் சக வீரர்கள் பந்தை எதிர்பார்த்து முன்செல்லுகின்ற பொழுது பந்து தாமதம் ஆவதனால் தண்டனைக்கு உள்ளாகின்றனர்.
2) உதை பந்தாட்ட ஆடுகளத்தின் தெற்குப் பகுதி எல்லைக் கோடு பார்வையாளர் அரங்கத்திலிருந்து 1அடி வித்தியாசத்தில் இருப்பது வலது கரையில் விளையாடுகின்ற வீரர்களின் விரைவான செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ளது.
திட்ட வரைபடத்தை இங்கே அழுத்திப் பார்வையிடுக
http://www.karaihinducanada.com/admin/reports/PG%20PLAN.jpg
3) படத்தில் 1 என குறிப்பிட்ட காணியை பெற்றுக் கொள்வதன் மூலமும் 3,4 என குறிப்பிட்ட காணியை பெற்றுக் கொள்வதன் மூலமும் உதைபந்தாட்ட ஆடுகளத்தை 2அடி வடக்கு நோக்கி நகர்த்துவதன் மூலம் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கு போதுமான இடம் கிடைக்கும்.
4)படத்தில் 3,4 என குறிப்பிட்ட காணியை பெற்று கொள்வதன் மூலம் தென்மேற்கு மூலையில் இருந்து மூலை உதை(Corner kick) அடிக்கின்ற வீரரின் இடையூறு நீக்கப்படும்.
5) வரைபடத்தில் 2 என குறிப்பிட்ட காணியினை பெற்றுக்கொள்வதன் மூலம் உதைபந்தாட்ட ஆடு களத்தினை மேற்கு நோக்கி நகர்த்தவும், கூடைப்பந்து, வலைப்பந்து, ஆகிய விளையாட்டு நிகழ்வுகளின் களத்தினை அமைக்கவும் வசதி ஏற்படும்.
கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை
400m ஓடு பாதை, பார்வையாளர் அரங்கு, சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றை உள்ளடக்கிய விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கு 200m நீளமும் 95m அகலமும் கொண்ட காணி தேவை.
தற்போது உள்ள நீளம் 115m நன்கொடையாக 22m பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மீதி 63m காணியினை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை இல்லை தற்போது உள்ள அகலம் 84m மீதி 11m நிலம் பெறுவதாயின் மைதானத்தின் தெற்கு புறத்தில் ஓடுகின்ற வடிகால்கள் தெற்கு நோக்கி நகர்த்தப்படல் வேண்டும் இவ்வாறு செயற்படும் பட்சத்தில் 5ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வசிப்பிடங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போதைய நிலைமை
1)1964ம் ஆண்டு கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கு முற்று முழுதாக அழிந்து போயுள்ளது.
2) கிழக்கு எல்லை மதில்
1970களில் மைதானத்தின் கிழக்கு எல்லைக்கு அமைக்கபட்ட மதில் ஓரமாக மாரி காலத்தில் நீர் வழிந்து ஓடுவதனால் 260 அடி நீளமான மதில் சரிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது.
3) வடக்கு எல்லை மதில்
• மைதானத்தின் வடக்கு எல்லை 142 அடி நீளமான மதில் நல்ல நிலையில் உள்ளது.
• மருத்துவமனையில் இருந்து பெறப்படும் 1 என குறிப்பிடப்பட்ட காணித் துண்டுக்கு மேற்கில் இருந்து பாடசாலையின் கிழக்கு எல்லை வரை தற்போது உள்ள மருத்துவமனை மதிலையும் பாடசாலையின் அரை மதிலையும் அகற்றி புதிதாக 232 அடிக்கு மதில் அமைத்தல் வேண்டும்.
• நன்கொடையாக பெறவுள்ள காணியின் வடக்கு எல்லைக்கு 75 அடி நீளம் புதிதாக மதில் அமைத்தல் வேண்டும்.
• மொத்தமாக 307 அடி நீளமான மதில் அமைத்தல் வேண்டும்.
4) தெற்கு எல்லை மதில்
• மைதானத்தின் தெற்கு எல்லையில் தற்போது உள்ள காணி 30 அடி நன்கொடையாக பெறப்பட உள்ள காணியின் 75 அடி மொத்தமாக 105அடிகக்கு புதிதாக மதில் கட்டப்பட வேண்டும்.
• தற்போது உள்ள மீதமான 340 அடி நீளமான மதிலில் 75 அடி நீளமான மதில் உடைந்து விழுந்துள்ளது மிகுதி 265 அடி நீளமான மதிலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. படத்தில் 3,4 என குறிப்பிடப்பட்ட காணி துண்டுகளை பெற்று மதிலை அமைப்பதன் மூலம் மதில் ஒரே நேர் கோட்டில் அமைவதுடன் சிறிய காணித் துண்டும் கிடைக்கப் பெறும்.
5) மேற்கு எல்லை மதில்
படத்தில் 2 என குறிப்பிடப்பட்ட காணி துண்டினையும் பெற்று மேற்கு எல்லைக்கு 280 அடி நீளமான மதில் அமைத்தல் வேண்டும்.
மைதானத்தின் மதிற் சுவர்களின் பாதுகாப்பிற்கும் மைதானத்தின் தரத்தைப் பேணுவதற்கும் ஆற்றப்பட வேண்டிய பணிகள்.
தடுப்புச் சுவர்(Rention wall)
தெற்குப் புறத்தில் உள்ள வடிகால்கள் மூலம் மாரி காலத்தில் அதிகளவு நீர் பாய்வதனால் தெற்குப் புறத்தில் புதிதாக அமைக்கவுள்ள 448 அடி நீளமான மதில் சுவர் பாதுகாப்பாக இருப்பதற்கு தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படல் வேண்டும்.
கடந்த காலங்களில் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்ட மதில்கள் இடிந்து வீழ்ந்தமைக்கும், பழுதடைந்தமைக்கும், தெற்குப் பக்க மதில் ஓரமாக நீர் பாய்வதும் பாதுகாப்பான தடுப்பு சுவர்கள் அமைக்காமையும் முக்கிய காரணமாகும்.
தெற்குப் பக்க மதிற்சுவரின் பாதுகாப்பு கருதி குறைந்த பட்சம் 4 அடி ஆழத்திலிருந்து (R.R.Masonary) அத்திவாரம் அமைக்கப்பட்டு மதில் அமைக்கப்படல் வேண்டும்.
மணற்காடு அம்மன் கோவிலிருந்து வலந்தலை சந்திக்கு அண்மியதாக (குழுவி மதகுக்கு) பின்புறமாக அமைக்கப்பட்ட குளம் வரை சீமெந்தினால் ஆன வடிகால்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது. இது சாத்தியமாகும் பட்சத்தில் மேலதிகமான தடுப்புச் சுவர்கள் (Rention wall) அமைய வாய்பு உண்டு.
வடிகால் (Drainage)
நீண்ட காலமாக மருத்துவமனை வளாகத்தினுள் விழுகின்ற மழை நீரும் கல்லூரியின் தெற்கு வளாக மழை நீரும் வழிந்து ஒடி மைதானத்திற்குள் தேங்குவது மழை காலத்தில் நீர் அதிகமாக தேங்கி நிற்பதற்கு முக்கிய காரணியாகும்.
மருத்துவமனை வளாகத்தில் இருந்து மழைநீர் மைதானத்திற்குள் விழுகின்ற மருத்துவமனையின் தெற்கு கிழக்கு மதில்கள் சந்திக்கின்ற மூலையில் இருந்து வடிகாலினை ஆரம்பிப்பதன் மூலம் கல்லூரியின் தெற்கு வளாகத்தில் இருந்து வரும் மழைநீரும் இவ் வடிகாலில் சேரும் இவ் வடிகாலினை மைதானத்தின் வடபுற ஓரமாக கிழக்கு எல்லை வரை நீட்டிச் சென்று கிழக்கு எல்லை மதில் ஓரமாக தெற்கு நோக்கி வடிகாலினை நீட்டிச் சென்று மைதானத்தின் தெற்கு எல்லையில் ஓடுகின்ற பிரதான வாய்க்காலில் இந்நீரை விடலாம்.
வீதி ஓரம் வடிகாலினை அமைக்கும் பொறுப்பினை பிரதேச சபையிடம் கையளிக்கலாம.;
மண் நிரப்பலும் புற்கள் பதித்தலும்
கலாநிதி. ஆ.தியாகராஜா, திரு. கே.கே. நடராஜா,திரு. வே. தர்மசீலன், திரு மு.சு வேலாயுதபிள்ளை, திரு. பொன்.சிவானந்தராஜா ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றிய காலங்களில் விளையாட்டு மைதானத்திற்கு மண் நிரப்பி மழை நீர் தேங்கி நிற்பதை தவிர்ப்பதில் அக்கறை செலுத்தியமையால் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது மழை நீர் தேங்கும் அளவு ஓரளவு குறைவடைந்து உள்ளது.
மருத்துவமனை, கல்லூரியின் தெற்கு வளாகம் ஆகியவற்றின் மழை நீரை வடிகால் மூலம் அகற்றுவதன்; மூலம் மைதானத்துக்குள் தேங்கும் நீர் அதிகளவாகயிருக்க மாட்டாது என்பது எதிர்பார்ப்பு.
தேவையேற்படின் வயல் மண் (புற்கள் முழைப்பதற்கும் பதிப்பதற்கும் ஏதுவாக) நிரப்பப்பட்டு மழைநீர் தெற்கு நோக்கி ஓடக்கூடியவாறு மைதானம் செப்பனிடப்பட வேண்டும்.
வீர, வீராங்கனைகளின் பாதுகாப்பிற்கும், மைதானத்தின் தரத்தைப் பேணுவதற்கும் புற்கள் பதிக்கப்பட்டு பேணப்படல் வேண்டும்.
மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள்
1) படத்தில்1,2,3,4 என குறிப்பிட்ட காணிகளை பெற்றுக் கொள்ளல் முதற் பணியாகும். இதன் மூலம் முன் மொழிவுகளில் குறிப்பிடப்பட்டவாறு பாதுகாப்பான விளையாட்டு மைதானம் வசதியான விளையாட்டரங்கம் அமைக்க முடியும்
2)1,2 காணிகளை பெற்றுக் கொள்வதற்கான நிர்வாக நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
3)பார்வையாளர் அரங்கு அமைத்தல். வரைபடம் செலவு மதிப்பீடு என்பன தயாரிக்கப்பட்டுள்ளது. Rs. 2,452,940/=
4)மதில் சுவர்கள் அமைத்தல்.
கிழக்கு – 260
வடக்கு –307
தெற்கு – 448
மேற்கு– 280
1295அடி X1500/= = Rs.1,942,500/=
படத்தில் 1என குறிப்பிட்ட காணியை மருத்துவமனையில் இருந்து பெற்றுக் கொள்ளுகின்ற பொழுது 162 அடி நீளமான மதிலும் பாடசாலையில் 70 அடி நீளமான மதிலும் மொத்தமாக 232அடி மதில் அமைக்க Rs 3,48000/= லட்சம் ரூபா அவசர தேவையாகும.;
5) கோள் கம்பங்கள் கூடைப் பந்தாட்ட மைதானம் என்பன அமைக்கப்படல் வேண்டும்
6)விளையாட்டு உபகரணங்கள் பாதணிகள் boots) சீருடைகள் (Jersey) என்பன வழங்கப்படல் வேண்டும்
7) மைதானத்தின் தேவையை பொறுத்து மண் நிரப்புதல் வேண்டும்.
8) புற்கள் பதித்தல் வேண்டும்.
9)மருத்துவமனை வளாகம், கல்லூரியின் தெற்கு வளாகம் ஆகிய இடங்களில் இருந்து வருகின்ற மழை நீரை அகற்றுவதற்குறிய வடிகால் அமைத்தல் வேண்டும்.
10) தெற்கு புற மதிலின் பாதுகாப்பு கருதி தடுப்பு சுவர்கள் அமைத்தல்.
11) சீமெந்திலான வடிகால்கள் அமைப்பதற்கான மதிப்பீடுகள் தற்போது நடைபெறுவதனால் படத்தில் 3,4 எனக் குறிப்பிடப்பட்ட காணியினை பெற்றுக்கொள்வது சாத்தியமாகும்
12)பார்வையாளர் மண்டபம் மதிற் சுவர் அமைத்தல் போன்ற பணிகளுக்கான நிதி ஏற்பாடுகளை தற்பொழுது மேற்கொள்ளப்படும் பட்சத்தில் எதிர்பார்க்கப்படும் காணிகள் விரைவில் கிட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் நிதியை ஏற்பாடு செய்து வைத்திருப்பின் காணிகள் கிடைத்தவுடன் விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிக்கலாம்.
உத்தேச மதிப்பீட்டை இங்கே அழுத்திப் பார்வையிடுக
http://www.karaihinducanada.com/admin/reports/estimate1.jpg
http://www.karaihinducanada.com/admin/reports/estimat%202.jpg
விளையாட்டு மைதான அபிவிருத்திப் பணிகளில் பங்குகொள்ள விரும்புவோர்
தொடர்புகளுக்கு
கனடியத் தொடர்புகளுக்கு:
காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா
தலைவர்: திரு.சி.தம்பிராஜா (416)438 6735
செயலாளர்: திரு.கனக.சிவகுமாரன் (647)766 2522
பொருளாளர்: திரு.ஆ.சோதிநாதன் (647)838 9323
காரைநகர் தொடர்பகளுக்கு:
காரை இந்து பழைய மாணவர் சங்கம்-காரைநகர்
செயலாளர்: திரு.இ.திருப்புகழுர்சிங்கம், தொலைபேசி இல. 077-5128962
திரு.எஸ்.கே.சதாசிவம் போசகர, தொலைபேசி இல.077–5411722 அல்லது
No Responses to “கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதான அபிவிருத்திக்கான முன் மொழிவுகள் திரு.எஸ்.கே.சதாசிவம்”