1888ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி தொடர்புபட்டு அவ்வப்போது பல எழுத்து ஆவணங்கள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக கல்லூரியின் பெயரிலும், நிறுவுனர் சயம்புவின் பெயரிலும் 1949ஆம் ஆண்டு முதல் முக்கியமான வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி எட்டிற்கு மேற்பட்ட சஞ்சிகைகள் வெளியிடப்பெற்றிருந்ததாக அறியமுடிகிறது. அண்மைக் காலத்தில் வெளிவந்த (2005, 2013) இரண்டு சஞ்சிகைகளைத் தவிர்த்து ஏனையவை அனைத்தும் கல்லூரியின் நூல்நிலையத்திலோ அன்றி பயன்பாட்டிற்குரிய வேறு இடங்களிலோ இல்லாதிருப்பது துரதிஸ்டவசமானதாகும். அவற்றினை தம்வசம் வைத்திருக்கக்கூடிய பழைய மாணவர்களிடமிருந்து மூலப் பிரதிகளைப் பெற்று பிரதிகளைத் தயாரித்து கல்லூரியின் நூல்நிலையத்திலும் பயன்படக்கூடிய பொருத்தமான வேறு இடங்களிலும் வைத்துப் பேணும் வகையிலான பணியினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை தற்போது முன்னெடுத்து வருகிறது. சங்கத்தின் இவ்வரலாற்றுப் பணியினை பொறுப்பேற்று செயற்படுத்த திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் முன்வந்துள்ளார். 1949ஆம் ஆண்டு கல்லூரியின் பெயரில் வெளிவந்த சஞ்சிகையைத் தவிர்த்து ஏனைய சஞ்சிகைகள் அனைத்தையும் சேகரிக்க முடிந்துள்ளதாக திரு.சதாசிவம் அவர்கள் அறியத்தந்துள்ளார்..
1950ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சிகையை வழங்கி உதவிய கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர்-பிரான்ஸ்) அவர்களிற்கும்
1951, 1952-1953 ஆகிய இரு ஆண்டுகளிலும் வெளிவந்திருந்த சஞ்சிகைகளை வழங்கி உதவிய ஓய்வுநிலை அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களிற்கும்
1952-1953, 1956, 1960, 1968-1969 ஆகிய நான்கு ஆண்டுகளிலும் வெளிவந்த சஞ்சிகைகளை வழங்கி உதவிய ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களிற்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
1949ஆம் ஆண்டு கல்லூரியின் பெயரில் வெளிவந்த சஞ்சிகையையோஅன்றி கல்லூரி தொடர்புபட்ட பிரசுரங்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியனவற்றினையோ தம்வசம் வைத்திருக்க்ககூடிய பழைய மாணவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையுடனோ அல்லது திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களுடனோ தொடர்புகொண்டு அறியத் தந்தால் குறிப்பிட்ட ஆவணங்களின் நிழற்படப் பிரதியினைப் பெற்றுக்கொள்ள ஏற்ற நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியும். இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட பழைய மாணவர்களது மேலான ஒத்துழைப்பையும் ஆதரவையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்பாக வேண்டிநிற்கின்றது.
தொடர்புத் தகவல்கள்:
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
எஸ்.கே.சதாசிவம்: E-Mail: satha.sham@yahoo.com, Mobile, Viber, WhatsApp.: 0775411722
No Responses to “காரை.இந்து தொடர்பில் வெளிவந்திருந்த ஆவணங்களை தேடிச் சேகரித்துப் பேணுகின்ற வரலாற்றுப் பணிக்கு பழைய மாணவர்களின் மேலான ஆதரவு வேண்டப்படுகிறது.”