காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தனது உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது.
சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற காரை.மண் தந்த மரபுக் கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்கள் கனடாவிற்கு வருகை தந்திருந்த சமயத்தில் இங்கு தாம் அவதானித்தவற்றை கவிதை வடிவில் அமைத்து பொருத்தமான பின்னணிக் காட்சிகளுடன் பதிவுசெய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த காணொளி, 2019 ஆம் ஆண்டு இவ்விணையத்தளம் ஊடாக எடுத்து வரப்பட்டிருந்தது. காணொளி வடிவிலமைந்த இவ்வாழ்த்தின் சிறப்புக் கருதி மீண்டும் அதனை கீழே பதிவேற்றம் செய்துள்ளோம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கனடா தின வாழ்த்துக்களும் காரை.மண் தந்த கவிஞர் நந்திவர்மன் அவர்களின் கவிதை வடிவிலான வாழ்த்தின் காணொளிப் பதிவும்.”