சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையின் பத்தாண்டு பூர்த்தியடைவதை முன்னிட்டு காரைநகர் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட அனைத்துலக கட்டுரைப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பங்குபற்றிய மாணவர்களுக்குமான பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.01.2014) அன்று ஈழத்துச் சிதம்பர தேர்த்திருவிழாவன்று நடைபெற்ற மணிவாசகர் விழாவில் பண்டிதை,செம்மொழிச்செல்வி, கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் முறையே 150, 100, 50 சுவிஸ் பிராங்குகளுக்குச் சமமான இலங்கை ரூபாய்களும், விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
கட்டுரைப் போட்டியில்பங்கு பற்றிய மாணவர்களுக்கு திறமைச் சான்றிதழும், நூற் பரிசில்களும் வழங்கப்பட்டன.
போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்று சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2014ம் ஆண்டிற்கான விருதுகளை வென்ற மாணவர்களின் விபரம்
பெயர் | நிலை | பாடசாலை | விருது |
நிசாந்தன் ஜெயபாலசிங்கம் | 1ஆம் பரிசு | கொக்குவில் இந்துக்கல்லூரி | காரை இளவறிஞர் |
துஷ்யந்தினி அரியபுத்திரன் | 1ஆம் பரிசு | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | காரை இளவறிஞர் |
சாந்தினி கனகலிங்கம் | 2ஆம் பரிசு | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | காரை இளஞ்சுடர் |
டினோஜா நவரட்ணராஜா | 3ஆம் பரிசு | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | காரைத் தென்றல் |
போட்டியில்பங்கு பற்றியமைக்கான திறமைச் சான்றிதழ் பெறும் மாணவர்கள் விபரம்
பெயர் | பாடசாலை | சான்றிதழ் |
யஸ்மின் நவரட்ணராஜா | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | திறமைச் சான்றிதழ் |
கஜவதனி லோகராசன் | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | திறமைச் சான்றிதழ் |
டிலானி கார்த்திகேசு | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | திறமைச் சான்றிதழ் |
வினோதன கனகலிங்கம் | கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி | திறமைச் சான்றிதழ் |
வெற்றி பெற்றி மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும்
No Responses to “சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்று சாதனை”