தோற்றம்: 24.09.1950 மறைவு: 30.07.2014
பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினை நிறுவுவதில் முன்னின்று உழைத்தவர்களுள் ஒருவரும் எமது சங்க செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவரும் சங்கத்தின் ஆரம்பகாலப் பொருளாளராகப் பணியாற்றியவருமாகிய திரு.ஆறுமுகம் சோதிநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும் எமது இணையத்தள நிர்வாகி திருமதி.கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களின் அன்பு மைத்துனருமாகிய திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் மறைவையொட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை அன்னாரது மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினருக்கு தமது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய ஈழத்துச் சிதம்பரத்துறை சிவகாமி சமேத நடராசாப் பெருமானை இறைஞ்சுகின்றது.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம்-கனடா
No Responses to “திரு.ஆறுமுகம் சோமசுந்தரம் அவர்களின் மறைவையொட்டி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்”