கடந்த டிசம்பர் மாதம் 2013 இல் நடைபெற்ற க.பொ.த.(சா-த)பரீட்சைப் பெறுபேறுகளில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில்; மிகச்சிறந்த பெறுபேறுகள் பற்றிய விபரத்தை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
எமது பாடசாலையில் இருந்து க.பொ.த (சா-த) தரப் பரீட்சைக்குத் தோற்றிய 44 மாணவர்களில் 27 மாணவர்கள் சித்தியெய்தி (61.4%) க.பொ.த உயர்தர வகுப்பில் கற்பதற்கு தகமை அடைந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டு சித்தியடைந்தோர் சதவீதத்திற்குச் (61.3%) சமனானதாகும்.
மேற்படி பரீட்சையில் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற A தர சித்திகளின் எண்ணிக்கையும் சித்தியடைந்த சதவீதமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பாடம் | A தரம் | சித்தியடைந்த சதவீதம்(%) | |
1. | நாடகம் | 12 | 100 |
2. | சங்கீதம் | 5 | 91 |
3. | புவியியல் | – | 89 |
4. | சமயம் | 25 | 86 |
5. | Information & Communicaiton Technology(ICT) | 1 | 83 |
6. | தமிழ் | 4 | 80 |
7. | வணிகம் | 4 | 79 |
8. | குடியியல் | – | 76 |
9. | சித்திரம் | – | 67 |
10. | சுகாதாரம் | 4 | 67 |
11. | கணிதம் | 4 | 63 |
12. | விஞ்ஞானம் | – | 54 |
13. | வரலாறு | 3 | 54 |
14. | நடனம் | – | 50 |
15. | ஆங்கிலம் | – | 36 |
மேற்படி அட்டவணையில் கலைத்துறை, நுண்கலைத்துறை, மற்றும் தகவல் தொழில்நுட்பத்ததுறையில் 75% சதவீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
மேலும் ஆங்கிலமொழிப் பாடத்தில் சித்தியடைந்தோர் சதவீதம் மிகக் குறைவாக இருப்பதனையும் இங்கு அவதானிக்கலாம்.
இந்த ஆண்டு தாய்ச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய கனடாக் கிளைச் சங்கத்தினால் ஆங்கிலபாடத்திற்கான மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கான வளவாளர் வேதனமாக 1,20,000 ரூபா ஒதுக்கப்பட்டு தாய்ச்சங்த்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையான திறமையான மாணவர்கள் எமது கல்லூரியில் ஆங்கில மொழிமூலக் கல்வியை 8ஆம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த காலகட்டத்தில்(2010இல்) ஆங்கில மொழிமூல ஆசிரியர் இடம்மாற்றம் பெற்றுச் சென்ற காரணத்தினால் மேற்படி வகுப்பைச் சேர்ந்த அதிசிறந்த மாணவர்கள் யாழ்நகரப் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி பயில நேரிட்டது என்று தாய்ச்சங்கத்தினரால் தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதிலும் பல சவால்களையும் நெருக்கடிகளையும் சமாளித்து எமது பாடசாலையில் தொடர்ந்து கல்வி கற்று மேற்படி சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தொடர்புபட்ட செய்தி.
க.பொ.த (சாதாரணம்) பரீட்சை, டிச.2013 பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்திலிருந்து உத்தியோக பூர்வமாக வெளிவந்துள்ளன.
No Responses to “க.பொ.த (சா-த) பரீட்சை – டிச.2013 பெறுபேறுகள் பற்றிய எமது கண்ணோட்டம்”