ஒரு பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அப்பாடசாலையின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் பெறுமதிமிக்க வளங்களில் குறிப்பிடத்தக்க ஒர் அலகாகும்.
கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 21-12-2013 இல் நடைபெற்றிருந்தது. இப்பொதுக் கூட்டத்தில் பதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டிருந்தது.
Pic
தெரிவு செய்யப்பட்ட தாய்ச் சங்கத்தின் புதிய நிர்வாகசபை எமது கல்லூரியின் பாரம்பரியம், பண்பாடு, பெருமை என்பவற்றைப் பேணுவதற்கும், பாடசாலையின் கல்வித்தர, பௌதீகவள மேம்பாட்டிற்கும்; நிர்வாகத்துடன் நேர்மனப்பாங்குடன் ஒத்துழைத்து சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டுமென பழைய மாணவர்களின் கனடாக் கிளை வாழ்த்துகின்றது.
pic
இதேவேளையில், முன்னைய நிர்வாக சபையின் பணிகளைப் பாராட்டி எமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம். குறிப்பாகப் பழைய மாணவர்களின் கிளைச் சங்கத்தை கனடாவில் அமைப்பதற்கு உறுதியாக ஒத்துழைத்த முன்னைய நிர்வாக சபைக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்பு பட்ட செய்தி
பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
No Responses to “தாய்ச் சங்கத்தின் முன்னைய நிர்வாக சபைக்கு நன்றியும் புதிய நிர்வாக சபைக்கு வாழ்த்துக்களும்!”