logo

இணையத்தள நிர்வாகி திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பொன்விழா காண்பதையிட்டு திரு.ஐ.தி சம்பந்தன் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தி

WIMG_9681 (2)

எமது நேச அமைப்பாகிய கனடா-காரை கலாசார மன்றத்தின் செயலாளராகவும் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி ஆளுமையும் செயற்திறனும் மிக்க செயற்பாட்டாளர் என்பதை அடையாளப்படுத்திய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் பெண் செயற்பாட்டாளர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குபவர்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பல வரலாற்றுத் தடங்களை ஏற்படுத்திய வண்ணம் பயணித்து வருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் தோற்றத்திற்கு உழைத்தவர்களுள் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமல்லாது இச்சங்கத்தின் வளர்ச்சியினை நகர்த்தி வருகின்ற இந்த இணையத்தளத்தினை திறமையாக நிர்வகித்து வருவதுடன் சங்கத்தின் நிர்வாகத்திலும் இடம்பெற்றுள்ள இவரது அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடு விதந்து போற்றுதற்குரியதாகும்.

தாம் கற்ற கல்லூரி மீதும் பிறந்த மண் மீதும் பற்றுதல்கொண்டு செயலாற்றி வருவதன் மூலம் கனடா வாழ் காரை மக்களினது அபிமானத்தினைப் பெற்று விளங்கும் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்கள் அண்மையில் பொன்விழா கண்டதையிட்டு கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தொடர்புமிக்க ஆயுள்கால உறுப்பினரும்(Associate Life Member) இச்சங்கத்தின் பெரிய பிரித்தானியாவுக்கான பிரதிநிதியும் தமிழ் இன உணர்வு மிக்கவராக அவர்களுக்கான சேவையினை பல தளங்களிலிருந்தும் வழங்கி சாதனையாளனாக உயர்த்திக்கொண்டவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தி இங்கே எடுத்து வரப்படுகின்றது.

பொன் விழா காணும் திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்

காரைநகரில் ஆசிரியர் பொன்னம்பலத்திற்கு செல்வ மகளாகப் பிறந்து வளர்ந்து கல்வி கற்று கனடாவில் பல்துறைப் பணியாற்றி வரும் கிருஷ்ணவேணிக்கு அகவை ஐம்பது. ஊருக்குப பெருமை தேடும் பெண்குலத் தலைவியாக விளங்குகிறீர்கள். காரை மக்கள் பெருமை அடைகிறார்கள்.

பொன் விழா பிரகாசிக்கட்டும். சுவிஸ்நாட்டு காரை மக்கள் வழங்கிய வாழ்த்து மடல் பரந்து வாழும் காரை மக்களின் பாராட்டுக்குரியது. தான் படித்த காரைநகர் இந்துக் கல்லூரியை வளர்க்க கனடாவில் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்க உழைத்ததை காரை மக்கள் மறக்கமாட்டார்கள.; சங்கத்தின் இணையத் தளத்தை பதமாக வளர்த்து வரும் ஆற்றல் மிகு பெண்மணிக்கு பொன் விழா வாழ்த்துக்கள்.

தங்கள் அறிவாற்றலை, திறமையை. ஊடகவல்லமையை காரை மண்ணின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பெண்மணியே உங்களுக்கு பொன் விழா வாழ்த்துக்கள்

எனது இனிய வாழ்துக்களை பொன்விழா காணும திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன் அவர்களுக்கு தெரிவிப்பதில் பெருமை அடைகின்றேன.;

அன்புடன்
ஐ.தி.சம்பந்தன்
இலண்டன்

IMG_9704 (2)