காரைநகர் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் முழுமையான அங்கீகாரத்துடன் கனடாவில் பழைய மாணவர் சங்கத்தினை நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சமயம் ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளையும் சவால்களையும் தாண்டி கல்லூரி மீது விசுவாசம் மிக்க பழைய மாணவர்கள் உணர்வுபூர்வமாக வழங்கியிருந்த பேராதரவினால் அனைவரும் வியக்கத்தக்கவகையிலும் பழைய மாணவர்கள் பெருமைகொள்ளும் வகையிலும் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 1ஆம் திகதி பழைய மாணவர் சங்கம் கனடாவில் தோற்றம் பெற்று கல்லூரியின் வளர்ச்சிப் பயணத்தில் திருப்புமுனை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்விதம் தோற்றம் பெற்ற இச்சங்கத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் அமைந்திருந்த நிர்வாகங்களின் அர்ப்பணிப்பு மிக்க தளராத உழைப்பினாலும் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரது தாராள உதவியினாலும் வரலாறு சொல்லும் வகையிலான பல பணிகளை முன்னெடுத்து பாடசாலையின் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்ற இச்சங்கம் இன்று ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது என்ற செய்தியை அங்கத்தவர்கள் பழைய மாணவர்கள் அனுசரணையாளர்கள் நலன்விரும்பிகள் ஆகியோருடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம்
சங்கத்திளை ஆரம்பிப்பதற்கு உழைத்ததுடன் மட்டுமல்லாது அதன் ஆரம்பகாலத் தலைவராகவிருந்து அதன் சிறப்பான செயற்பாட்டிற்கு அடித்தளமிட்டவரான அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தன்னலமற்ற சேவையை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூருகின்றோம். அதேபோன்று ஐந்தாண்டு காலத்தில் அமைந்திருந்த நிர்வாகங்களில் இடம் பெற்றிருந்த தலைவர்கள்இ செயலாளரகள் பொருளாளர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள பொதுச்சபை உறுப்பினர்கள்இ போசகர்கள் அனுசரணையாளர்கள நலன் விரும்பிகளஇ; இணையத்தள நிர்வாகி ஆகிய அனைவரதும் கல்லூரி மீதான விசுவாசத்தினைப் பாராட்டி மீண்டும் ஒருமுறை தலை சாய்த்து நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு பலரிடமிருந்தும் வாழ்த்துச் செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இச்செய்திகளும் இக்காலப்பகுதியில் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாதனைப் பணிகளின் பட்டியலும் சங்கத்தின் தோற்றம் குறித்த முக்கியமான வரலாற்றுப் பதிவுகளும் இவ்விணையத்தளத்தினூடாக எடுத்து வரப்படவுள்ளதால் வாசகர்கள் அடுத்தவரும் சில நாட்களுக்கு இதனுடன் இணைந்திருந்து அவற்றினைப் பார்வையிடமுடியும்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா
No Responses to “தளர்வில்லாத தனது இலட்சியப் பயணத்தில் வரலாறு படைத்துவரும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது!”