காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஐந்தாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் மே மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 டிசம்பர் வரையான ஓராண்டு காலப் பகுதியில் பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிகள் உதவிகள் ஆகியவை தொடர்பிலான செயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை என்பன உறுப்பினர்கள் அனைவருக்கும் வழமைபோல தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படவுள்ளன.
2017ஆம் ஆண்டுக்கான உறுப்புரிமைப் பணம் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேவேளையில் 2016ஆம் ;ஆண்டுக்கான உறுப்புரிமைப் பணத்தினைச் செலுத்தியுதவத் தவறிய உறுப்பினர்கள் அதனையும் சேர்த்து வழங்கியுதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். அத்துடன் இதுவரை உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளாதிருக்கின்ற பழைய மாணவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டு கல்லூரியின் மேம்பாட்டில் பங்கெடுக்குமாறும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
பழைய மாணவர்களையும் அவர்களது வாழ்க்ககைத் துணைகள் பிள்ளைகள் ஆகியோரையும் இணை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்கின்ற செயற்பாடும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களிடமும் பிரதேச இணைப்பாளர்களிடமும் உறுப்புரிமைப் பணத்தினை நேரடியாக கையளிக்க முடியும்.
உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வது குறித்த விபரம் உறுப்புரிமைப் பணத்தினைச் செலுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் ஆகியனவற்றைப் பார்வையிடவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ளவும் கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும்.
http://www.karaihinducanada.com/?page_id=1756
தொடர்பிலக்கங்கள்: 416-8040587 அல்லது 417-2676999
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
மொன்றியல் பிரதிநிதி: திருமதி செல்வதி ஸ்ரீகணேசர் 1(438)8378089
ஒட்டாவா பிரதிநிதி: திருமதி சந்திரா முத்துராசா 1(613)8437719
ஐக்கிய அமெரிக்க இராச்சியம் பிரதிநிதி: திரு.கந்தையா தர்மராசா 1(718)7405366
இணை உறுப்புனர்கள் (Associate Members)
உறுப்பினர்களின் வாழ்க்கைத் துணைகள் பிள்ளைகள் ஆகியோரும் ஸ்ரீலங்கா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் வதியும் பழைய மாணவர்களஇ; முன்னைநாள் ஆசிரியர்களஇ; பணியாற்றிய அலுவலர்கள் ஆகியோரும் அவர்களது வாழ்க்கைத் துணைகள்இ பிள்ளைகள் ஆகியோரும்இணை உறுப்பினர்களாக(Associate Members) இணைந்துகொண்டு கல்லூரியின் மேம்பாட்டில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு சங்கத்தின் யாப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மூலம் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரும் உறுப்பினர்களாக இணைந்துகொண்டு ; ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வழங்கியுதவுமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
விபரங்களைப் பார்வையிடவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக்கொள்ளவும் கீழே தரப்பட்டுள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும்.
http://www.karaihinducanada.com/?page_id=1756
உறுப்பரிமையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் சங்கத்தின் திரத்தப்பட்ட யாப்பினைப் பார்வையிட கீழே உள்ள இணைப்பினை தயவுசெய்து அழுத்தவும.
http://www.karaihinducanada.com/?page_id=2054
No Responses to “யா/காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக கிளை உறுப்பினர்களுக்கும் புலம் பெயர்ந்து ஏனைய நாடுகளில் வதியும் பழைய மாணவர்களுக்கும் சங்க நிர்வாகம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்.”