‘பிரதீபா பிரபா’ விருது பெற்ற கல்லூரியின் பழைய மாணவி செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.
கந்தரோடை, சுன்னாகம் யா/ஸ்கந்தவரோதய ஆரம்ப பாடசாலையின் உப அதிபராகப் பணியாற்றுகின்ற எமது கல்லூரியின் பழைய மாணவி செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற ‘பிரதீபா பிரபா’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
செல்வி சாவித்திரியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. செல்வி சாவித்திரி சைவத் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி காரைநகர் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் சிவஸ்ரீ கலாநிதி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் புதல்வி என்பது குறிப்ப்pடத்தக்கதாகும்.
செல்வி. சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் ‘பிரதீபா பிரபா” விருது வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட படத்தினைக் கீழே காணலாம்.
No Responses to “‘பிரதீபா பிரபா’ விருது பெற்ற கல்லூரியின் பழைய மாணவி செல்வி சாவித்திரி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.”