பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர் திருமதி.துர்க்கா தர்மரட்ணம் அவர்களின் அன்புத் துணைவர் திரு.முத்தையா செல்வரட்ணம் அவர்கள் கனடா, ஸ்காபுரோவில் வியாழக்கிழமை (18.08.2016 அன்று சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
முழுமையான மரண அறிவித்தலைக் கீழே காணலாம்.
மரண அறிவித்தல்
திரு.முத்தையா தர்மரட்ணம
(வேலணை – காரைநகர் – கனடா)
வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியை பிறப்பிடமாகவும் காரைநகர் வலந்தலை சயம்பு வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கனடா ஸ்காபுரோவில் வசித்து வந்தவருமாகிய திரு.முத்தையா தர்மரட்ணம் 18-08-2016அன்று சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்புப் புதல்வனும் காலஞ்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் துர்க்காலட்சுமியின் அன்புக் கணவரும் வைதேகி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற செல்வி வதனேஸ்வரி, செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(இலங்கை), வில்வரட்ணம்(Swiss),செல்வராணி(வேலணை), காலஞ்சென்ற வசந்தராணி, லலிதா(Denmark),ஜெயரட்ணம்(சுவேந்திரன்-இலங்கை)ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் சஞ்ஜீவன், Farah ஆகியோரின் பாசமிகு மாமனாரும் Saishaவின் பாசமிகு தாத்தாவும் காலஞ்சென்ற தங்கமுத்து, காலஞ்சென்ற செல்வராஜா, மனோன்மணி (Singapore),தங்கமணி (Malaysia),தேவகி (Canada),துரைச்சாமி (Canada),நவமணி (Malaysia),நவரத்தினம் (Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 21ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்4.00மணியிலிருந்து இரவு 8.00மணிவரை 4164,Sheppard Ave.East Scarborough ON M1S 1T3 என்ற முகவரியில் அமைந்துள்ள OGDEN Funeral Home இல் வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12.30 மணியிலிருந்து இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற பின்னர் பிற்பகல் 3.00மணி முதல் பிற்பகல்3.30மணி வரைக்கும் 4570 , Yonge Street Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Forest Lawn Crematorium இல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: சஞ்ஜீவன்(மருமகன்) 416-6068370
ஜனார்த்தனன்(மகன்) 647-8226341
செல்வரட்ணம்(சகோதரன்) 647-3411848
No Responses to “மரண அறிவித்தல், திரு.முத்தையா தர்மரட்ணம் (வேலணை – காரைநகர் – கனடா)”