Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான (Best Hardware Application Team) வெற்றிக் கேடயத்தை காரைநகர் இந்துக் கல்லூரியின் அணி இவ்வாண்டும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது.
வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub பெருமையுடன் நடத்திய Yarl Geek Challenge 5 Juniors போட்டிக்கான மாகாண மட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 2016.06.26 அன்று கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றன. வடமாகாணத்தைச் சேர்ந்த 12 கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் முன்னணிப் பாடசாலைகளின் அணிகள் உட்பட 31 மாணவ அணிகள் மேற்படி போட்டியில் பங்குபற்றியிருந்தன.
வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக் கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் “சிறந்த வன்பொருள் அணி” (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி தமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளதாக காரை இந்துவின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்கள் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு அறியத்தந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற Yarl Geek Challenge 5 Juniors – 3 மற்றும் Yarl Geek Challenge 5 Juniors – 4 போட்டிகளிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு யாஃகாரைநகர் இந்துக்கல்லூரி வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி (Best Hardware Application Team) எனும் சாதனையை நிலைநாட்டி வெற்றிக் கேடயத்தைத் தட்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி அணியில் பங்குபற்றிய மாணவர் விபரம் வருமாறு :
இவ்வணியினருக்கான வெற்றிக் கேடயத்தையும் சான்றிதழையும் Yarl IT Hub நிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வன் க. கஜந்தன், செல்வன் சி. தூயவன், செல்வன் க. சிவதர்சன் ஆகியோர் பெற்றுக் கொள்வதனையும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் திருமதி.சிவாஜினி லக்ஸ்மன், திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
இச்சாதனையை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக நிலைநாட்டி கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரிய மணிகளுக்கும் பாடசாலையை வழிநடத்திவரும் அதிபர், பதில் அதிபர், பகுதித் தலைவர் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
No Responses to “காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை”