கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் மூன்றாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (25.04.2015) அன்று நடைபெற உள்ள நிலையில், சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும் சங்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நிர்வாகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கைகளை இங்கே அழுத்திப் பார்வையிடாலாம்.
Annual Reports 2014
செயலாளர் திரு. கனக சிவகுமாரன் சென்ற பொதுக் கூட்ட அறிக்கையினையும், செயற்பாட்டு அறிக்கையினையும் சமர்ப்பித்து வாசித்திருந்தார். இவ்விரு அறிக்கைகளும் திருத்தங்களின்றி சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
பொருளாளர் திரு.ந.பிரகலாதீஸ்வரன் கடந்த நிதியாண்டிற்குரிய வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்து அவ்வறிக்கை தொடர்பான விளக்கத்தினையும் சபைக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்வறிக்கையும் சபையால் ஏகமனமகதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
No Responses to “பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும்”